ETV Bharat / state

பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி - பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ! - Tamil Cinema update

தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ‘பிக்பாஸ் சீசன் 5’ டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமோகன் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ!

author img

By

Published : Jul 2, 2022, 8:44 PM IST

சென்னை: பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘பிக்பாஸ் சீசன் 5’ டைட்டில் வின்னரான நடிகர் ராஜூ ஜெயமோகன், இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதற்கு நன்றி கூறும் விதமாக ராஜூ ஜெயமோகன் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், “அன்புள்ள உங்களுக்கு வணக்கம்! பல கனவுகளோடும் ... சினிமா ஆசைகளோடும் ... ஆண்டுதோறும் சென்னை மண்னில் நம்பிக்கை அடியெடுத்து வைக்கும் பல கோடி சாமான்யர்களுள் நானும் ஒருவன். இன்று உங்கள் ஆசியாலும் அரவணைப்பாலும் தொலைக்காட்சி துறையிலும், திரை துறையிலும் உங்கள் மனதிலும் ஓர் இடம் கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ!
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ!

இன்று பிறந்த நாள் காணும் எனக்கு, அளவற்ற அன்பை அள்ளி தந்திருக்கும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். முன்னேர எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சறுக்காமல் இருக்க கைப்பற்றி துணை நின்ற நண்பர்கள், திரை பிரபலங்கள், தொலைக்காட்சி மற்றும் சினிமா தயாரிப்பளர்களுக்கு நன்றி.

மேலும் இயக்குனர்கள், உடன் நடித்த கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காத மக்களிடமும் என்னை சென்றடையச் செய்த யூ - டியூப் சேனல்கள், மீம் கிரியேட்டர்கள் மற்றும் என் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்தில் ராஜூ நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'துப்பாக்கி' பாண்டியனாக ஜி.பி.முத்து: இறுதிகட்டப்படப்பிடிப்பில் "பம்பர்"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.