சென்னை மாவட்டம், அகரம் தென் ஊராட்சிக்குள்பட்ட வெங்கம்பாக்கம், குறிச்சிநகர், ஹஸ்மாபுரம், சத்தியநகர் ஆகிய பகுதிகளில் தாம்பரம் தொகுதி அமமுக வேட்பாளர் ம.கரிகாலன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டர்.
அப்போது வேட்பாளர் கரிகாலனுக்கு 20 கிலோ எடை கொண்ட ரோஜா பூ மாலை அணிவித்தும், மலர் தூவியும் அமமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் திறந்த வெளி ஜீப்பில், வீதி வீதியாக சென்று குக்கர் சின்னத்திற்கு அதரவு திரட்டினார். அதனை தொடர்ந்து வாக்களார்களிடம் பேசிய வேட்பாளர் ம.கரிகாலன், “தாம்பரம் தொகுதியில் தற்போது தன்னை எதிர்த்து போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும், இத்தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் தான். ஆனால் தொகுதிக்கு அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஆனால் நான் தாம்பரம் நகரமன்ற தலைவராக இருந்து செய்த நலத்திட்டங்களை சொல்லி உங்களிடம் ஓட்டு கேட்கிறேன். என்னை தாம்பரம் தொகுதியில் வெற்றி பெற வைத்தால் உங்களின் ஒருவனாக பணியாற்றுவேன். எனவே குக்கர் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: முன்னாள் பிரதமர் தேவகௌடாவுக்கு கோவிட்-19 பாதிப்பு