ETV Bharat / state

பள்ளி திறந்த முதல் நாளே வழங்கப்பட்ட பாடப் புத்தகங்கள்; மாணவர்கள் மகிழ்ச்சி - students were happy

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறந்த முதல் நாளே ஒன்று முதல் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பள்ளி திறந்த முதல் நாளே வழங்கப்பட்ட பாடப் புத்தகங்கள்

author img

By

Published : Jun 13, 2022, 1:01 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறந்த முதல் நாளான இன்றே ஒன்று முதல் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பாடப்புத்தகங்களை வழங்கினார்.

நடப்பு கல்வியாண்டில் 2022ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையிலும் முதல் பருவத்திற்கான பாடப்புத்தகம், 8 முதல் 12 வரை படிக்கும் மாணவர்களுக்கு மூன்று புத்தகம் என மூன்று கோடியே 35 லட்சத்து 25 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன.

பள்ளி திறந்த முதல் நாளே வழங்கப்பட்ட பாடப் புத்தகங்கள்

மாணவிகள் பள்ளிகள் திறந்த அன்றே பாடப்புத்தகங்களை பெற்றது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் கூறும்போது, மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து விலையில்லா திட்டப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

10ஆம் வகுப்பு பயிலும் மெஹருன்னிஷா கூறுகையில், ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. முதல் நாளே புத்தகம் பெற்றது மேலும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் நன்றாக படிக்க கடவுளை பிரார்த்தனை செய்வதாக கூறினார்.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியில் உருவாக்கப்பட்ட சாலையோர விற்பனைக் குழுக்கள் கலைப்பு எனத் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.