ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மூன்று லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர் எழுதிய இத்தேர்வில், 99 விழுக்காட்டினர் தோல்வி அடைந்துள்ளனர். வெறும் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, 324 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர்.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஜூன் 9இல் தகுதித் தேர்வு நடைபெற்றது. 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இத்தேர்வில் 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்ற நிலையில், டெட் முதல் தாளிலும் 99 விழுக்காட்டினர் தோல்வியடைந்தனர். இரண்டு தாள்களிலும் தலா 99 விழுக்காட்டினர் தோல்வியைத் தழுவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.