ETV Bharat / state

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் எனவும், இதுவரை 3 லட்சத்து 63 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு
author img

By

Published : Apr 4, 2019, 10:20 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, 2019ஆம் ஆண்டின் ஆசிரியர் தகுதித்தேர்வில் உள்ள தாள் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றினை எழுதுவதற்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி ஒன்று முதல் ஐந்தாம்வகுப்பு வரை கற்பிப்பதற்கு தாள் ஒன்றுதேர்வினை எழுதுவதற்கு பன்னிரெண்டாம் வகுப்பில் 50 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும். இரண்டாம் தாளான ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிப்பதற்கு பட்டதாரி கல்வியில் 45 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

இந்த தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் நடத்தப்படும். இதற்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அதைத்தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் கையொப்பத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் பயன்படுத்தக்கூடிய இமெயில், ஐடி மொபைல் நம்பர் ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500ம், எஸ்.சி, எஸ்சி.ஏ, எஸ்.டி மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ரூ. 250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக உள்ள நிலையில் இதுவரை 3 லட்சத்து 65 ஆயிரத்துபேர் விண்ணப்பித்துள்ளனர்.

Intro:ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் 3 லட்சத்து 63 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Body:சென்னை, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு மூன்று லட்சத்து 63 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 ல் தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றினை எழுதுவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்விற்கு ஆன்லைன் மூலம் மார்ச் 15 ம் தேதி முதல் ஏப்ரல் 5 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத்தேர்வு நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டது. அதேபோல் அரசு விதிகளின்படி ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை கற்பிப்பதற்கு தாள் 1 தேர்வினை எழுதுவதற்கான தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிப்பதற்கு தாள் 2 தேர்வினை எழுதுவதற்கான கல்வித் தகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியற்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் விதிகள் இதற்கும் பொருந்தும் என அதில் கூறப்பட்டிருந்தது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பில் 50சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் கேள்விக்குறி வகை வினாக்களாக அமைக்கப்பட்டு நடத்தப்படும். இந்த தேர்விற்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்விற்கு WWW.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் கையொப்பத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் பயன்படுத்தக்கூடிய இமெயில் ஐடி மொபைல் நம்பர் ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பத்தில் அளிக்கப்படும் அனைத்து தகவல்களும் இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஆன்லைனில் ஏப்ரல் மாதம் 5 ம் தேதி 5 மணிக்குள் விண்ணப்பங்களை பதிவேற்றம் வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500ம், எஸ் சி, எஸ்சி ஏ, எஸ் டி ,மாற்று திறனாளிகள் 250 ம் கட்ட வேண்டும். தகுதியான தேர்வர்களுக்கு மட்டுமே ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்களுக்கு எந்தவித எழுத்துப்பூர்வமான தகவல்களும் அளிக்கப்படாது. அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றால் 7 ஆண்டுகள் செல்லும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அளிக்கக்கூடிய சான்றிதழானது பணி நியமனத்திற்கு தகுதி பெற்றது அழகான சான்றிதழ் மட்டும் . ஆசிரியர் பணிக்கு தனியாக போட்டி தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தவறான தகவல் அளித்தாலும் தேர்வின் பொழுது முறைகேடுகள் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டு இருந்தது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆன்லைன் மூலம் 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 3ம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 எழுதுவதற்கு 3 லட்சத்து 47 ஆயிரத்து 727 விண்ணப்பதாரர்களும், ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 எழுதுவதற்கு 15 ஆயிரத்து 369 விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி தேசிய ஆசிரியர் கல்வியியல் நிறுவனத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் விண்ணப்பங்களை பெற்று வருகிறோம். ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.