சென்னை: 2022-23ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை அரசுத்தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்குத்தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடைகிறது. மாணவர்கள் வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடங்கள், விடைத்தாளில் உள்ள தகவல்களை சரிபார்த்து பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து தேர்வுகள் காலை 10.15 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 மணி வரையில் 3 மணி நேரம் நடைபெறுகிறது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
13.3.2023 - மொழித்தாள்
15.3.2023 - ஆங்கிலம்
17.3.2023 - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் கொள்கைகள், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் பயன்பாடு, உயிர் வேதியியல், சிறப்பு தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
21.3.2023 - இயற்பியல், பொருளியியல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்
27.3.2023 - கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், சத்துணவியல் (NUTRITION AND DIETETICS), ஆடை வடிவமைப்பு மற்றும் துணிநூல், உணவு சேவை மேலாண்மை (FOOD SERVICE MANAGEMENT), விவசாயப் பணிகள், நர்சிங்(பொது)
31.3.2023 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், துணிநூல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயல்முறைகள்
3.4.2023 - வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
14.3.2023 - மொழித்தாள்
16.3.2023 - ஆங்கிலம்
20.3.2023 - இயற்பியல், பொருளியியல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், தொழில் திறன் கல்வி
24.3.2023 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்,
அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங்,
அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங்,
துணிநூல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயல்முறைகள்
28.3.2023 - வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல்
30.3.2023 - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் கொள்கைகள், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் பயன்பாடு, உயிர் வேதியியல், சிறப்பு தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
5.4.2023 - கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், சத்துணவியல்(NUTRITION AND DIETETICS), ஆடை வடிவமைப்பு மற்றும் துணிநூல், உணவு சேவை மேலாண்மை(FOOD SERVICE MANAGEMENT), விவசாயப் பணிகள், நர்சிங்(பொது)
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
6.4.2023 - மாெழித்தாள்
10.4.2023 - ஆங்கிலம்
13.4.2023 - கணக்கு
15.4.2023 - விருப்பப் பாடம்
17.4.2023 - அறிவியல்
20.4.2023 - சமூக அறிவியல்
இதையும் படிங்க: 'அவுட்சோர்சிங்' முறையால் திமுக அரசு 'அவுட்' ஆகும் - ஓபிஎஸ் காட்டம்