சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வரும் 22ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
அதிக பட்சமாக நாகர்கோவில் (கன்னியாகுமரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), மயிலாடி (கன்னியாகுமரி), பொதுப்பணித்துறை வாரப்பட்டி (கோயம்புத்தூர்) தலா 3, கூடலூர் பஜார் (நீலகிரி), ஆனைமடுவு அணை (சேலம்), மேல் கூடலூர் (நீலகிரி), கரியகோவில் அணை (சேலம்), உப்பாறு அணை (திருப்பூர்), டேனிஷ்பேட்டை (சேலம்), போடிநாயக்கனூர் (தேனி), திற்பரப்பு (கன்னியாகுமரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), அமராவதி அணை (திருப்பூர்) தலா 2 மழை பெய்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள மீனவர்களுக்கான எச்சரிக்கை: 22.05.2023 மற்றும் 23.05.2023 ஆகிய நாட்களில் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் அதிகரித்து காணப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: "வேலைன்னா வெயிலுக்கு முன்னாடியே பாருங்க":சுட்டெரிக்கும் கோடை வெப்பம்; ஓ.ஆர்.எஸ். இருப்பு வைக்க முதல்வர் அறிக்கை