சென்னை அடுத்த தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி வளாகத்தில் குழந்தைகளுக்கான தொலைபேசி வழி ஆலோசனை மையத்தை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கிவைத்தார்.
இந்த மையத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியவர்கள் தங்களுக்கான சந்தேகங்களைத் தெரிந்துகொள்ளலாம். நோய் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவச் சேவை, ஆம்புலன்ஸ், படுக்கைகள், ஆக்சிஜன் தேவைகள் போன்ற தகவல்களைப் பெற 20 பேர் கொண்ட பணியாளர்கள் குழு நியமிக்கப்பட்டு கணினி, தொலைபேசி மூலமாகத் தகவல்கள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ. கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு