மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் வேட்பாளர்களை அறிவிக்கும் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இந்திய குடியரசு கட்சியின் தமிழ் மாநில தலைவருமான திரு சே.கு. தமிழரசன், கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மு.தங்கராஜ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயளாளர் சம்பத் ஆகியோர் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல் ஹாசனை சந்தித்துப் பேசினர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர்.மகேந்திரன் உடனிருந்தார்.