ETV Bharat / state

மே 30ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மே 30ஆம் தேதி முதல் பணிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : May 18, 2020, 10:45 PM IST

பள்ளிக் கல்வித்துறை இயக்ககம்
பள்ளிக் கல்வித்துறை இயக்ககம்

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுவதால், தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் மே 30ஆம் தேதி முதல் பணிக்கு வரவேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அவர்கள் படித்த பள்ளிகளிலேயே விரைவில் நடத்தப்பட உள்ள நிலையில், தனி மனித இடைவெளியை ஆசிரியர்களும் மாணவர்களும் கறாராகப் பின்பற்ற வேண்டும் என அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்கள்
பத்தாம் வகுப்பு மாணவர்கள்

இந்தத் தேர்வுகளை நடத்த முன்னதாக மொத்தம் 3 ஆயிரத்து 900 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், வகுப்பிற்கு 10 மாணவர்கள் என சமூக இடைவெளியுடன் அமர வைத்தால், கூடுதலாக வகுப்பறைகள் தேவைப்படும். எனவே மாணவர்களுக்கு அவரவர் படிக்கும் 12 ஆயிரத்து 900 பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை அமைக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

அதேபோல் ஏற்கெனவே 40 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களையும் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மே 30ஆம் தேதி முதல் பணிக்குத் திரும்ப வேண்டும் என்கின்ற பள்ளிக்கல்வித்துறையின் அறிவுரையை ஏற்று, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதையும் படிங்க : 20 விழுக்காடு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் வீ வொர்க் இந்தியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.