தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் நாள், வாக்கு எண்ணிக்கை நாள்களில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் எடுத்துவருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 4ஆம் தேதிமுதல் 6ஆம் தேதிவரையும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (ஏப். 4) தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இருப்பினும் மதுப்பிரியர்கள் சிலர், சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர்களிடம் கூடுதல் விலை கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதாகக் தகவல்கள் வெளிவருகின்றன.
மூன்று நாள்கள் டாஸ்மாக் கடைகளை மூடியது மதுப்பிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுப்பிரியர்களை உற்சாகப்படுத்திய காவலர்!