சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் சுப்புராயலு ராமலிங்கம் (72). இவர் இன்று அதிகாலை இரும்புலியூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இவர் நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி வந்துகொண்டிருந்த மின்சார ரயில் சுப்புராயலு ராமலிங்கம் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, அங்கிருந்து பொதுமக்கள் தாம்பரம் இருப்புப்பாதை காவல் துறையினர் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்துவந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் இரட்டை சகோதரர்களுக்கு அரிவாள் வெட்டு!