ETV Bharat / state

TANCET, CEETA-PG தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!

முதுகலை பொறியியல் நுழைவுத் தேர்வுகளான டான்செட் மற்றும் சீட்டா தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TANCET, CEETA-PG தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!
TANCET, CEETA-PG தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!
author img

By

Published : Apr 13, 2023, 8:30 PM IST

TANCET 2023 மற்றும் CEETA-PG 2023 முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: முதுகலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான சீட்டா (CEETA) மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கான (டான்செட் - 2023) தேர்வு முடிவுகள் நாளை (ஏப்ரல் 14) வெளியிடப்படும் எனவும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிக்கப்பட்டுள்ளது.

இதில் டான்செட் எம்சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை மார்ச் 25ஆம் தேதி காலையிலும், எம்பிஏ படிப்பிற்கான தேர்வினை மார்ச் 25ஆம் தேதி மாலையிலும் தேர்வர்கள் தேர்வெழுதினர். அதேபோல், CEETA-PG எம்இ, எம்டெக், எம்.ஆர்க் மற்றும் எம்.பிளான் ஆகிய படிப்பில் சேர்வதற்கான தேர்வு மார்ச் 26ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முதுகலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான சீட்டா மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கு (TANCET 2023) பிப்ரவரி 28ஆம் தேதி வரையில் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

டான்செட் எம்சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை மார்ச் 25ஆம் தேதி காலையில் எழுதுவதற்கு விண்ணப்பம் செய்திருந்த 9 ஆயிரத்து 820 மாணவர்களில், 9 ஆயிரத்து 279 மாணவர்கள் தேர்வினை எழுதினர். 541 மாணவர்கள் தேர்வினை எழுதவில்லை. அதேபோல் எம்பிஏ படிப்பிற்கான தேர்வினை மார்ச் 25 அன்று மாலையில் 24 ஆயிரத்து 468 பேர் பதிவு செய்ததில், 22 ஆயிரத்து 774 மாணவர்கள் தேர்வெழுதினர். ஆயிரத்து 703 மாணவர்கள் தேர்வினை எழுதவில்லை.

சீட்டா-பிஜி என்ற எம்இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வினை மார்ச் 26ஆம் தேதி நடைபெற்ற தேர்வினை 4 ஆயிரத்து 961 பேர் எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 4 ஆயிரத்து 350 பேர் கலந்துகொண்டு தேர்வெழுதினர். 611 பேர் தேர்வினை எழுதவில்லை. இவ்வாறு தேர்வினை எழுதிய 36 ஆயிரத்து 403 மாணவர்களுக்கான முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மேலும் இவர்களுக்கான தேர்வு முடிவுகளை https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலை வருகிற 20ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் பெயர், முதல் எழுத்து, பிறந்த தேதி, பாலினம், சாதி மற்றும் இருப்பிடம் போன்றவற்றில் திருத்தம் இருந்தால், உரிய ஆதாரங்கள் உடன் உடனடியாக tanceeta@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஒரு முறை மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து விட்டால், மீண்டும் மாற்ற முடியாது. முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் இந்த ஆண்டு நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போதே, அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரி, உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்விற்கும் விண்ணப்பம் செய்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெற கால அவகாசம் நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.