ETV Bharat / state

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வழக்கு: தனி நீதிபதி உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய காவலர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai
chennai
author img

By

Published : Mar 3, 2020, 1:15 PM IST

2019ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பாணையை வெளியிட்டது. அதன்பின் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவைகள் முடிவடைந்து பிப்ரவரி 2ஆம் தேதி, தற்காலிக வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில், வேலூரில் ஆயிரத்து 19 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் தேர்வாகினர். அதைத்தொடர்ந்து திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பரசன், உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் வேலூர், விழுப்புரத்தில் தேர்வான அனைவரும் 'சிகரம்' பயிற்சி மையத்தில் படித்தவர்கள். அவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள். ஆகவே அவர்களின் கட் ஆஃப் மதிப்பெண், இடஒதுக்கீடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மறு உத்தரவு வரும்வரை தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்பின், அந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதிகள் ஏ.பி.சாஹி, சுப்ரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அதில் அரசு தரப்பில், ஒரே தேர்வு மையத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றார்கள் என்பதும், எழுத்து தேர்வில் தோல்வியடைந்த மூன்று பேர் உடற்பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுவதும் ஆதாரமற்றது. எனவே தனி நீதிபதி பிறப்பித்திருக்கும் உத்தரவை ரத்து செய்யுமாறு தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிகள், முறைகேடுகள் குறித்து எந்த ஆவணங்களையும் ஆராயாமல் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதியின் உத்தரவு தவறு. அந்த உத்தரவு தீவிரப் பின்விளைவுகளை ஏற்படுத்தும். இந்த வழக்கில் காவல் துறையினர் புலன் விசாரணை நிலுவையிலிருப்பதால், தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 6 வயது சிறுமி தொடுத்த வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு கெடுவிதித்த நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.