ETV Bharat / state

வாகன அபராதத்தை குறைத்து விரைவில் அரசாணை வெளியிடப்படும்  - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் - வாகன அபராதத்தை குறைத்து விரைவில் அரசாணை வெளியிடப்படும்

சென்னை: மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிக்கப்படும் அபராதத் தொகையை குறைத்து, விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Motor Vehicle Act
author img

By

Published : Oct 2, 2019, 12:22 PM IST

Updated : Oct 2, 2019, 12:45 PM IST

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் தலைமைச் செயலக பழைய கருத்தரங்கு கூடத்தில் ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ” தீபாவளி பண்டிகை காலத்தில் சென்னையில் ஐந்து பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். திண்டிவனம், திருவண்ணாமலை, செஞ்சி ஆகிய பகுதிகளுக்கு தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்தும், காஞ்சிபுரம், வேலூர், ஆரணி ஆகிய பகுதிகளுக்கு பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்தும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தொலைத் தூரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 23ஆம் தேதி சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்படும். சென்ற ஆண்டு தீபாவளிக்கு அரசு பேருந்துகளின் மூலம் சுமார் ஏழு லட்சம் பேர் பயணம் செய்தனர்” எனக் குறிப்பிட்டார்.

தீபாவளி சிறப்புப் பேருந்துகள்
தீபாவளி சிறப்புப் பேருந்துகள்

தொடர்ந்து பேசிய அவர், ஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கவும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அரசு பேருந்துகள் சுங்கச் சாவடிகளில் சீராக இயங்க தனி வரிசை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விடுமுறை காலங்களில் கனரக வாகனங்கள் நகரத்திற்குள் வர கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இறுதியாக அவர், ''சென்னையில் மாநகர பேருந்துகளை சரியான இடைவெளியில் இயக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முன்பை விட தற்போது அரசு பேருந்துகளில் மக்கள் வரத்து அதிகரித்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தில் அபராதத்தின் அளவைக் குறைக்க போக்குவரத்து ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இது சம்மந்தமான அரசாணை வெளியிடப்படும்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர்
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர்

மேலும், கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும். அதனால் விபத்து, உயிரிழப்புகள் தான் ஏற்படுகிறது'' என்றார்.

இதையும் படிங்க:நடத்துநரைத் தாக்கிய காவலர்கள் - விசாரணைக்கு ஆஜராக மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

Intro:Body:https://wetransfer.com/downloads/d883fc08b63eceb512c8068d05dd59c020191001103032/dbbd573bd2e6d4c1a66972f4b60639d720191001103032/e55620

போக்குவரத்துத்துறை அமைச்சர்
திரு எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் தலமைச்செயலகம் பழய கருத்தரங்க கூடத்தில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்ற பிறகு
தற்பொழுது அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர்,

சென்னையில் இருந்து தீபாவளிக்கு 5 பேருந்து நிலையங்கள் இருந்து இயக்க படும். திண்டிவனம், திருவணமலை,செஞ்சி ஆகிய பகுதிகளுக்கு தாம்பரம் பேருந்து நிலையம் வாயிலாக செல்லும். பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், வேலூர்,ஆரணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தொலை தூரம் செல்லும் பேருந்துகள் இயக்க படும். தீபாவளிக்கு அக்டோபர் 23 தேதி சிறப்பு கவுண்டர் திறக்க படும்.

ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. சென்ற ஆண்டு தீபாவளிக்கு அரசு பேருந்து மூலம் 7 லட்சம் பயணிகளை பயணம் செய்துள்ளனர்.

அரசு பேருந்துகள் சுங்க சாவடிகளில் சீராக இயங்க தனி வரிசை உருவாக்க பட்டுள்ளது.
விடுமுறை காலங்களில் கனரக வாகனங்கள் நகரதிர்க்குள் வர கட்டுப்பாடு விதிதுள்ளோம்.
சென்னையில் மாநகர பேருந்துகளை சரியான இடைவெளியில் இயக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க பட்டுள்ளது. முன்பிருந்த காலங்களை விட தற்போது அரசு பேருந்துகளுக்கு மக்கள் வரத்து அதிகரித்துள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தில் அபராததின் அளவை குறைக்க போக்குவரத்து ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.கூடிய விரைவில் இது சம்மந்தமான அரசாணை கூடிய விரைவில் வெளியிட படும்.

கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். அதனால் விபத்து உயிரிழப்பு தான் ஏற்படுகிறது.
ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்படுத்த தான் செய்கிறது. என்றார்.

தொடர்ந்து அத்தி வரதர் வைபவம் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து மேலாண்மை இயக்குனர்களுக்கு அமைச்சர் சான்றிதழ் அளித்து அவர்களை கௌரவபடுத்தினார்.Conclusion:
Last Updated : Oct 2, 2019, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.