ETV Bharat / state

தமிழகத்தில் மேலும் 2385 பேருக்கு கரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஓமன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும், தமிழ்நாட்டில் இருந்த 2383 நபர்கள் உள்பட 2385 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில்
தமிழகத்தில்
author img

By

Published : Jul 1, 2022, 10:36 PM IST

சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் இன்று (ஜூலை 1) வெளியிட்டுள்ள புள்ளிவிபர தகவலில், "கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்து 520 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் ஓமன் மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த தலா ஒரு நபர்களுக்கும், தமிழ்நாட்டில் இருந்த 2 ஆயிரத்து 383 நபர்கள் உள்பட 2 ஆயிரத்து 385 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 59 லட்சத்து 99 ஆயிரத்து 349 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 34 லட்சத்து 77 ஆயிரத்து 570 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 12 ஆயிரத்து 158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சிகிச்சை பெற்று வந்த நபர்களில் குணமடைந்த 1321 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து 34 லட்சத்து 27 ஆயிரத்து 386 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

சென்னையில் 1025 பேர், செங்கல்பட்டில் 369 பேர், கோயம்புத்தூரில் 118, காஞ்சிபுரத்தில் 84, திருவள்ளூர் 121, கன்னியாகுமரி 72, திருநெல்வேலி 64, திருச்சி 67 என அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று வேகமாக பரவி உள்ளது. கரோனா வைரஸ் தொற்று பரவல் விகிதம் மாநில அளவில் 6.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் 16.6 சதவீதம், ஈரோட்டில் 11.8 சதவீதம், திருவள்ளூரில் 10.5% சதவீதம் என பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அதேபோல் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையும் மாவட்ட அளவில் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. சென்னை மாவட்டத்தில் 5173 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2058 பேரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 746 பேரும் என சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா 4 ஆம் அலை தொடங்கிவிட்டதா? கரோனா தரவு வல்லுநர் (covid data analyst) விஜய் ஆனந்த் பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.