கேரளாவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து வகைப்பள்ளிகளிலும் எல்கேஜி, யூகேஜி, ப்ரீ கேஜி பயிலும் மாணவர்களுக்கும், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் 31ம் தேதி முறை விடுமுறை அளிக்க முடிவு எடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டாம் என மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் விடுமுறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா பீதி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு