ETV Bharat / state

தமிழ்நாட்டில் பொதுமுடக்கத்துக்கு வாய்ப்பில்லை- மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Jan 11, 2022, 1:03 PM IST

கரோனா பாதிக்கப்பட்டோரில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பதாகவும், முழு ஊரடங்கு இல்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை திருவான்மியூரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று வழங்கினார்.

பின்னர் அடையாறு மண்டல அலுவலகத்தில் உள்ள கரோனா ஆலோசனை மையத்தையும் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 2000க்கும் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் பாதிக்கப்படுபவர்கள் மிதமான தொற்று இருப்பதால் அவர்களை ஐ.சி.எம்.ஆர்., ஆலோசனைப் படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி வருகிறோம்.

வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்குத் தன்னார்வலர்கள் உதவி

வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் காலை மாலை பல்ஸ் ஆக்ஸ்மீட்டரில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அளவு 92க்கு கீழ் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

சென்னையில் 26 ஆயிரம் பேர் கரோனா சிகிச்சையில் உள்ள நிலையில் இதில் சுமார் 21987 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். இணை நோய் உள்ளவர்கள் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு வரலாம், லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம்.

சென்னையில் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களைக் கண்காணிக்க 178 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் காணொளி மூலம் பங்கேற்பார்

நாளை பிரதமர், முதலமைச்சர் தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரியைத் திறந்துவைக்க உள்ளனர். டெல்லியிலிருந்து பிரதமர் காணொலி மூலம் திறந்துவைப்பார். நாளை மாலை 4-5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமைச் செயலகம் வர இருக்கிறார்.

11 கல்லூரிகளில் 1450 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவற்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்கிறார்.

ஒமைக்ரான் பரிசோதனை இப்போது செய்யப்படவில்லை, பாதிப்பில் 85 சதவீதம் ஒமைக்ரான் அறிகுறிதான் இருக்கிறது. இப்போது வரும் பாதிப்பு எல்லாமே எஸ் ஜீன் பாதிப்பு தான். ஒமைக்ரான் அறிகுறி தான் என்பதால் தனியாக ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்படுவதில்லை.

ஆனால் புதிய வைரஸ் எல்லாம் பரவுகிறது என்று சொல்வதால் அதிக பாதிப்புள்ள கிளஸ்டர் பகுதிகளில் மட்டும் பாதிப்புகளைப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கிறோம். கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் இருப்பவர்களுடன் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை

மக்களின் வாழ்வாதாரம், பாதிக்கப்படக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிர ஆலோசித்து முடிவு எடுக்கிறார். மக்கள் ஒத்துழைப்பால் கொடுத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் வராது.
பொங்கலுக்குப் பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பு இல்லை. பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் 15ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் இந்த வாரம் மெகா தடுப்பூசியை நடத்தாமல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம், விரைவில் முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பு.. 4ஆம் இடத்தில் தமிழ்நாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.