ETV Bharat / state

பாஜகவின் புதிய தலைவர் யார் என்பது டிசம்பர் முதல் வாரம் தெரியும்!

சென்னை: டிசம்பர் முதல் வாரம் தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகி இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

tamilnadu new bjp leader election
author img

By

Published : Nov 13, 2019, 12:02 AM IST

தமிழ்நாடு பாஜகவின் உயர்மட்ட குழுக் கூட்டம் சென்னை தியாகராய நகரிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், பாஜகவின் அமைப்புத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன், "அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. குறிப்பாக தீர்ப்புக்குப் பின் நாட்டில் எங்கும் சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படவில்லை. கோயில் கட்ட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

டிசம்பர் முதல் வாரம் தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்தல் நடைபெறும். பாஜக தலைவர் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். ஒருமித்த கருத்து ஏற்படவில்லையென்றால் தேர்தல் நடத்தப்பட்டு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இல. கணேசன் செய்தியாளர் சந்திப்பு

’உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி தொடரும்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இருப்பினும், பாஜக எல்லா இடங்களிலும் தனித்து நிற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டாலும் அதைச் சந்திக்கும் அளவுக்கு தொண்டர்களுக்கு நாங்கள் ஊக்கம் தந்திருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தரப்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விருப்பமனு விநியோகம் வருகின்ற 16ஆம் தேதி தொடங்கும்" என்றார்.

இதையும் படிங்க: ‘எங்களின் ஆதரவு ஸ்டாலினுக்குதான்!’ - அறிவாலயத்தில் திருநங்கைகள் பேட்டி

Intro:Body:

சென்னை:

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், பாஜகவின் அமைப்பு தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்த தமிழக பாஜக உயர்மட்ட குழு
கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயதில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன் கூறியதாவது:

அயோத்தியில் ராமர் ஆலயம் கட்ட தீர்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. குறிப்பாக தீர்ப்புக்கு பின் நாட்டில் எங்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை. கோயில் கட்ட அனைவரும்
ஒத்துழைப்பு தர வேண்டும். டிசம்பர் முதல் வாரம் தமிழக பாஜக தலைவர் தேர்தல் நடைபெறும். மத்திய தலைமைதான் தேர்வு அதிகாரியை அனுப்புவார்கள் என்பதால் தேதியை உறுதியாக சொல்ல முடியாது. தேர்தல் சின்னத்தில் போட்டியிடும் அனைத்து பொறுப்புகளிலும் பாஜக தொண்டர்கள் பணியாற்றத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பமனு விநியோகம் வரும் 16 ஆம் தேதி தொடங்கும். பாஜக தலைவர் தேர்தல் நியமனம் அல்ல. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கருத்தொற்றுமை ஏற்படாவிட்டால் தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடர்பாக இப்போது பேச்சுவார்த்தை நடைபெறவில்லை, எல்லா இடங்களிலும் பாஜக தொண்டர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என முதல்வர் கூறியிருக்கிறார், இருப்பினும் பாஜக எல்லா இடங்களிலும் தனித்து நிற்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் அதை சந்திக்கும் அளவுக்கு தொண்டர்களுக்கு நாங்கள் ஊக்கம் தந்து இருக்கிறோம். விபத்து பல்வேறு காரணங்கள் ஒன்று சேர்ந்து நடைபெறுகிறது. இவரைக் கொல்ல வேண்டுமென்று பேனர் வைக்கப்படுவதில்லை, வேறு காரதிற்காக பேனர் வைத்தார்கள் விதியால் வசமாக இவர்கள் வந்தார்கள். இதனால் தமிழகத்தில் எங்கும் பேனர் வைப்பது இல்லை என்ற முடிவு எடுத்திருக்கிறோம் என்பது அந்தப் பெண்ணின் தியாகத்தினால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்து இருக்கிறார். நடிகர்களும் மனிதர்கள் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Conclusion:Visual in mojo
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.