ETV Bharat / state

''இனி யாரு சொன்னாலும் முடி வளர மருந்து பயன்படுத்தமாட்டேன்'' - மினிஸ்டர் மா.சுப்பிரமணியன் கலகல பேச்சு - அழகுசாதனை பொருட்கள்

தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் தயாரித்துள்ள ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''முடி வளர்வதற்கும் மருந்து உள்ளது என்று டாம்ப்கால் அதிகாரிகள் தெரிவித்தார்கள், இனி யாரு சொன்னாலும் முடி வளர மருந்து பயன்படுத்தமாட்டேன்'' என கலகப்பாக பேசினார்.

Tamilnadu Medicinal Plant Farms and Herbal Medicine Corporation Limited Cosmetics launch event
தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் லிமிடெட் அழகுசாதன பொருட்கள் வெளியீட்டு விழா
author img

By

Published : Apr 5, 2023, 4:00 PM IST

சென்னை: ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் (Tamilnadu Medicinal Plant Farms and Herbal Medicine Corporation Limited) டாம்ப்கால் தயாரித்துள்ள கூந்தல் தைலம், மூலிகை ஷாம்பு, மூலிகை கூந்தல் பொடி, மூலிகை முகப்பொலிவு பொடி, கூந்தல் தைலம் ப்ளஸ், மூலிகை சோப் (பசுமை & வெண்மை) உள்ளிட்ட ஆறு அழகுசாதனைப் பொருட்களை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் சார்பில் 11 வகையான அழகு சாதனப் பொருட்கள் வரும் நிதி ஆண்டில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவோம் என்று சென்ற நிதி நிலை அறிக்கையில் சொல்லி இருந்தோம்.

11 பொருட்களில் முதற்கட்டமாக 6 வகையான பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவை, இயற்கை முறையைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் எந்தவித பின் விளைவுகளும் இருக்காது. டாம்ப்கால் லாபம் ஈட்டும் அமைப்பாக உள்ளது. மூலிகைப் பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் இந்த அழகுசாதனப் பொருட்கள் எந்தப் பிரச்னையும் இல்லாதவையாக இருக்கும்.

தனியார் கம்பெனிகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் இந்தப் பொருட்களைவிட 3 மடங்கு விலை அதிகமாக உள்ளது. அரசு சார்பில் தயாரிக்கப்படும் இவை கூடுதல் பாதுகாப்பானது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் ஆசையைத் தூண்டி கூடுதல் விலைக்கு பொருட்களைக் கொடுத்து வருகிறது. நானே அதற்கு ஒரு உதாரணம் 1975ஆம் ஆண்டுகளில் அழகுசாதனப் பொருள் கண்டு மயங்காதவர் இருக்க முடியாது.

அந்த இளைய சமுதாயத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். தொடர்ந்து 48 ஆண்டுகளாக அதனை காலையும் மாலையும் பயன்படுத்தி வருகிறேன். ஆனால், இன்று வரை சிவப்பாக மாறியதாக தெரியவில்லை. இன்னும் கூடுதல் கருப்பாகத் தான் இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், ஏன் பயன்படுத்தி வருகிறீர்கள் என்று கேட்கலாம். தொடர்ந்து பயன்படுத்தியதால், அதை செய்யவில்லை என்றால் முகத்தில் முகப்பருக்கள் வந்துவிடுகின்றன.

முடி வளர்வதற்கும் மருந்து உள்ளது என்று இங்கு உள்ளவர்கள் தெரிவித்தார்கள். இனி யாரு சொன்னாலும் முடி வளர மருந்து பயன்படுத்தமாட்டேன். இந்த டாம்ப்கால் அழகுசாதனப் பொருட்கள் அழகை தருகிறதோ இல்லையோ நிச்சயம் பக்க விளைவுகள் தராது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கருணாநிதி குடும்பத்திற்கு அடிமை சாசனம் - திமுகவினரை விளாசும் எடப்பாடி பழனிசாமி!

இதையும் படிங்க: நானும் டெல்டாக்காரன் தான்; நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது - முதலமைச்சர் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.