ETV Bharat / state

வெற்றி இலக்கை எட்டிய இளம் வேட்பாளர்கள்! - இலக்கை வென்ற இளம் வேட்பாளர்கள்!- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இந்த முறை அதிகமான இளம் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் வெகுவான வேட்பாளர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர்.

Tamilnadu Local body election many young candidate won

author img

By

Published : Feb 22, 2022, 5:02 PM IST

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதனையடுத்து இந்தத் தேர்தலில் அதிகமான அளவில் இளம் பெண்களும், இளம் வேட்பாளர்களும் போட்டியிட்டனர். அரசியல் கட்சி சார்பாகக் களம்கண்ட வேட்பாளர்களைத் தாண்டி சுயேச்சையாகவும் போட்டியிட்டனர். இந்நிலையில் கணிசமான அளவில் இளம் வேட்பாளர்கள் வெற்றியும் அடைந்துள்ளனர்.

திமுக சார்பில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 136ஆவது வார்டில் 22 வயதுக்குள்பட்ட இளம் வேட்பாளராக நிலவரசி துரைராஜ் 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார். இவரின் தந்தை திமுகவைச் சேர்ந்தவர் ஆவார். நிலவரசி துரைராஜ் முதலமைச்சர் ஸ்டாலினை முன்மாதிரியாகக் கொண்டு அரசியலுக்கு வந்தேன் என்று கூறியிருந்தார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி நகராட்சி வார்டு எண் 5இல், 22 வயது இளம் வேட்பாளர் சினேகா சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பி.இ. பட்டதாரியான இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

இதேபோல் கொடைக்கானல் 7ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 25 வயது பிரபா ஷாமிலி ஜீவா வெற்றிபெற்றுள்ளார். நாகர்கோவில் மாநகராட்சி 17ஆவது வார்டில் திமுக இளம்பெண் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரியை 4000 வாக்கு வித்தியாசத்தில் வென்ற இளம் வேட்பாளர் பரிதி இளம் சுருதி முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முத்துநகர் மாநகரை முத்தமிட்ட திராவிட முன்னேற்றக் கழகம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.