ETV Bharat / state

மறைந்த பத்திரிகையாளர் மோகன் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் - தமிழ்நாடு அரசு ஆணை - 2 lakhs for journalist mohan family

மாரடைப்பால் உயிரிழந்த தினகரன் பத்திரிகையாளர் மோகனின் மனைவி சசிகலா, பத்திரிகையாளர் குடும்ப நலத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கக் கோரினார். அதை ஏற்ற தமிழ்நாடு அரசு, பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க ஆணையிட்டுள்ளது.

Tamilnadu govt announces 2 lakhs for journalist mohan family

author img

By

Published : Nov 18, 2020, 3:47 PM IST

சென்னை: பத்திரிகையாளர் குடும்ப நல நிதி திட்டத்தின் மூலம், பத்திரிகை துறையில் 11 வருடத்திற்கு மேல் பணிபுரிந்த பத்திரிகையாளர் மோகன் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் விவரங்கள் பின்வருமாறு:

பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி: 20 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்திருந்தால் ரூ. 2 லட்சம், 15 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் ரூ. 1.5 லட்சம், 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் ரூ. 1 லட்சம், 5 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் ரூ. 50 ஆயிரம் என இருந்தது. தற்போது வெளியிடப்பட்ட அரசாணையில் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி பின்வருமாறு உயர்த்தி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

அதில், 20 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்திருந்தால் ரூ. 3 லட்சம் , 15 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் ரூ. 2 லட்சம், 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் ரூ. 1.5 லட்சம், 5 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் ரூ. 75 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.