ETV Bharat / state

கலைஞர்களுக்கு நிதியுதவி! தமிழ்நாடு அரசு அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அறிப்பு

சென்னை: கலைஞர்கள் மற்றும் கலை குழுவினருக்கு இலவச கருவிகள், ஆடைகள், அணிகலன்கள் வாங்க நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு  அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
author img

By

Published : Jun 2, 2020, 3:15 AM IST

தொன்மை சிறப்புமிக்க தமிழ்நாடு கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக்குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில், இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் ரூ.5000 வீதம் 500 கலைஞர்களுக்கும், கலைக்குழு ஒவ்வொன்றுக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் 100 கலைக்குழுக்களுக்கும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் விவரம்

1. தனிப்பட்ட கலைஞரின் வயது 31.03.2020 தேதியில் 16 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

2. கலைக்குழுக்கள் தங்களது கலை நிறுவனத்தை பதிவு செய்திருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படும். தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் கலைஞர்கள் / கலைக்குழுக்கள் சுயமுகவரியிட்ட உறையில் ரூ.10-க்கான தபால் தலை ஒட்டி “உறுப்பினர்-செயலாளர்,தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,சென்னை-600 028. தொ.பே. 044 – 2493 7471.” என்ற மன்ற முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப 30.06.2020 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே 30.06.2020 செவ்வாய் கிழமை மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமோ அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.