சென்னை: சமீபத்தில் கிண்டியில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்நாடு - தமிழகம் குறித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. நேற்று (ஜன.9) நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, திராவிடம், அம்பேத்கர் உள்ளிட்ட சொற்கள அங்கிய பத்தியை உரையில் இருந்து நீக்கி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து, பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
-
ஆளுநர் அழைப்பிதழ்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது.
நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார்.1/2#தமிழ்நாடு pic.twitter.com/HYsiUZgQHX
">ஆளுநர் அழைப்பிதழ்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 10, 2023
கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது.
நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார்.1/2#தமிழ்நாடு pic.twitter.com/HYsiUZgQHXஆளுநர் அழைப்பிதழ்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 10, 2023
கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது.
நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார்.1/2#தமிழ்நாடு pic.twitter.com/HYsiUZgQHX
இந்த நிலையில், ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் லட்சினை இடம் பெறாதது மீண்டும் புதிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கடந்த முறை வந்த ஆளுநர் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் லட்சினை இருந்தது.
இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் லட்சினை மட்டுமே இருக்கிறது. நமது லட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால், அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும், வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரம்பை மீறினாரா ஆளுநர்..? - சட்ட வல்லுநரின் கருத்து