இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை கொள்ளை விளக்கக் குறிப்பில், “தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், அரசுப்பணிகளில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினைத் தொடர்ந்து செயல்படுத்திடவும், பேணிக் காத்திடவும் அரசு உறுதிபூண்டுள்ளது.
மத்திய அரசின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கும்போது வளமான (Creamy Layer) நீக்கம் செய்யும் கொள்கையை அரசு எப்போதும் எதிர்த்துவருகிறது.
பெரியாரும், அண்ணாவும், நேருவும், அம்பேத்கரும் வலியுறுத்திவந்தவாறு பொருளாதார நிலை அளவுகோலாகக் கருதாமல் சமூக நிலையை மட்டும் கருதி பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் மத்திய அரசின் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் வழிவகுக்கும் வகையில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.