ETV Bharat / state

தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு போட்டியாக உள்ளது!

திருவள்ளூர்: தமிழ்நாட்டிலிருந்து அதிகமான குழுக்கள் பங்கேற்று மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு கடும் போட்டியாக அமைந்துள்ளன என்று மனிதவள மேம்பாட்டு தொழில்நுட்ப இயக்குனர் அபே ஜெரி கூறியுள்ளார்.

state
author img

By

Published : Jul 10, 2019, 11:02 PM IST

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக 2019ஆம் ஆண்டுக்கான ஸ்மார்ட் ஹாகோதன் போட்டி சென்னைக்கு அடுத்த ஆவடி வேல் டெக் தனியார் கல்லூரியில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தெலங்கானா, கர்நாடகா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அபே ஜெரி, "தமிழ்நாட்டில் நான்கு மையங்களில் திறன் மேம்பாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மையமும் சென்னையில் இரண்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 250 குழுக்கள் பங்கேற்றுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து அதிகமான குழுக்கள் பங்கேற்று மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு கடும் போட்டியாக அமைந்துள்ளன” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு போட்டியாக உள்ளது!

தமிழ்நாட்டில் இருந்து தரம் மிக்க கண்டுபிடிப்புகள் வருவது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், 5 நாட்கள் ஹாகோதன் போட்டி நிறைவுற்றதும் சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அவர்களுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்து அவற்றை எவ்வாறு வியாபாரமாக தொடங்க வேண்டும் என்பதை முடிவுசெய்ய உள்ளதாக கூறினார்.

மேலும், இந்த போட்டிகள் மூலமாக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள், அவர்களது மதிபெண்களைவிட புதிய கண்டுபிடிப்புகள் முக்கியம் என்பதை உணர வேண்டும். இளைஞர்கள் அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாடுகளில் மாணவர்கள் வேலை தேடுபவராக இல்லாமல், வேலை கொடுப்பவராக மாற வேண்டும் என்ற மனநிலை வரவேண்டும். இந்தியாவில் குறைந்த செலவில் சிறந்த தரமான தொழில்நுட்பம் கிடைக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.

Intro:மற்ற மாநிலங்களில் உள்ள மானவர்கள்களுக்கு தமிழக மாணவர்கள் கடும் போட்டியாக இருப்பதாக மனிதவள மேம்பாட்டு தொழில்நுட்ப இயக்குனர் அபெயஜெரி செய்தியாளர் சந்திப்பில் பெருமிதம்Body:மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு திறமையை ஊக்குவிக்கும் வகையில் ஸ்மார்ட் ஹாகத்தோன் எனும் பல்வேறு மாநில பொறியியல் மாணவர்களுக்கிடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன.2019ம் ஆண்டுக்கான ஸ்மார்ட் ஹாகோதன் போட்டி சென்னைக்கு அடுத்த ஆவடி வேல் டெக் தனியார் கல்லூரியில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது.இதில் தெலுங்கானா,கர்நாடக, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்தியா முழுவதும் 2000மாணவர்கள் 250 குழுக்களாக பங்கேற்றுள்ளனர். இதனை மத்திய மனிதவள மேம்பாட்டு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் துறை இயக்குனர் அபே ஜெரி பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்பிகளை அவருக்கு விளக்கி காண்பித்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அபே ஜெரி தற்போது இங்கு 16 குழுக்களாக மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.அவற்றில் ஒரு சில கண்டுபிடிப்புகள் சிறப்பானதாக உள்ளது தமிழகத்தில் நான்கு மையங்களில் இந்த திறன் மேம்பாட்டு போட்டிகள் நடைபெறுகின்றது,கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மையங்களும் சென்னையில் 2 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.நாடுமுழுவது 250 குழுக்கள் பங்கேற்றுள்ளது,தமிழகத்திலிருந்து அதிகமான குழுக்கள் பங்கேற்று மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு கடும் போட்டியாக தமிழக அணிகள் உள்ளன.தமிழகத்தில் இருந்து தரமிக்க கண்டுபிடிப்புகள் வருகின்றது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார்.தொடர்ந்துபேசிய அவர் 5 நாள் ஹாகோதன் போட்டி நிறைவுற்றதும் சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அவர்களுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்து அவற்றை எவ்வாறு வியாபாரமாக துவங்க வேண்டும் என்பதை முடிவுசெய்யஉள்ளதாக கூறினார்.இந்த போட்டிகள் மூலமாக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் மதிபெண்களைவிட புதிய கண்டுபிடிப்புகள் முக்கியம் என்பதை உணரவேண்டும் இளைஞ்சர்கள் அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மாணவர்கள் வேலை தேடுபவராக இல்லாமல் வேலை கொடுப்பவராக மாரவேண்டும் என்ற மனநிலை வரவேண்டும்.இதுபோன்ற கல்லூரிகளில் நடத்துவதன் மூலம் வேலை தேடுபரக இல்லாமல் வேலைகொடுப்பவர்களாக மாற்ற வேண்டும் என்பதே நோக்கம்.இந்தியாவில் குறைந்த செலவில் சிறந்த தரமான தொழில்நுட்பம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.