இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், '1967ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி 'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை 'தமிழ்நாடு' என மாற்றி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவ்வாறு மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும். இந்நாளில் தமிழ்நாடு அரசு சார்பில் விழா நடத்தப்படும்.
அதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, தமிழ் மொழியின் சிறப்பை இன்றைய சமூகத்தினருக்கு வெளிப்படுத்தும் வகையில் கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் இந்த விழா அமையும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கிய தமிழக அரசு