ETV Bharat / state

உலக வங்கி நிதியில் புத்துயிர் பெறும் தமிழ்நாட்டின் அணைகள்! - உலக வங்கி நிதியில் புத்துயிர் பெறும் தமிழ்நாட்டின் அணைகள்

சென்னை: தமிழ்நாட்டில் நதிகளின் அணைகளைப் பலப்படுத்த உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறை களமிறங்கியுள்ளது.

author img

By

Published : Mar 4, 2020, 7:49 AM IST

தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரங்களாக விளங்கும் நதிகளின் நீரைச் சேமிக்க அணைகளின் பங்கு இன்றியமையாதது. மேலும் இந்த அணைகள் மூலம் நீர் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமாக 120-க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன.

இந்தியாவிலுள்ள அணைகளைச் சீரமைக்கும் பொருட்டு உலக வங்கியின் நிதியுதவியுடன் 'அணைகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்' செயல்படுத்தப்படும் என்று 2012ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இரண்டாயிரத்து 100 கோடி ரூபாய் அணை புனரமைப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. இதன்படி 70 விழுக்காட்டுத் தொகையை உலக வங்கியும், 30 விழுக்காட்டுத் தொகையை மாநில அரசும் பங்கிட்டுக் கொள்கின்றன.

நூறு விழுக்காடு பணிகளுக்கு மாநில அரசே செலவழித்து தேவையான பணிகளை முடித்த பின்புகூட பணத்தை உலக வங்கியிடம் பெற்றுக்கொள்ள முடியும். தமிழ்நாடு அரசு சார்பில் 2020 நிதிநிலை அறிக்கையில்கூட இந்தப் பணிகளுக்கு 220 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அணை
அணை

அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்காகத் தமிழ்நாடு அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு அணைகளின் மதகுகள், கரைகளை ஆய்வுசெய்து அரசுக்கு அறிக்கை அனுப்பும். தற்போது அணைகளின் எண்ணிக்கை அதிகமுள்ள நிலையில் ஆறு பேர் கொண்ட குழுவால் அணைகளின் பாதுகாப்பை நேரில் ஆய்வுசெய்து அரசுக்கு அறிக்கை வழங்க ஏதுவாகக் கூடுதலாக எட்டு பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.

அணை வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி உறுப்பினர் நரேஷ்குமார் மாத்துர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் விவேக் திரிபாதி, பொதுப்பணித் துறையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் உள்ளிட்ட எட்டு பேர் உள்ளனர்.

அணை
அணை

இந்தக் குழு அணையின் தன்மை, கொள்ளளவு, மதகுகளின் நிலை, அணைகளுக்குச் செல்லக்கூடிய சாலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வுசெய்து அரசுக்கு அறிக்கை தாக்கல்செய்யும். முதல்கட்ட அணை புனரமைப்புப் பணியில் தமிழ்நாட்டில் 69 அணைகளில் பணிகளை குழு தொடங்கியது. இதற்காக 543 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்தப் பணிகள் 2020ஆம் ஆண்டு ஜூன் வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 67 அணைகளின் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

இந்நிலையில் இந்தத் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக தமிழ்நாட்டிலுள்ள 37 அணைகளை 610 கோடி ரூபாயில் உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு அரசு சீரமைக்க உள்ளது. இதற்கான பணிகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என்று பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அணை
அணை

மேட்டூர், ஆழியாறு, திருமூர்த்தி, பவானி சாகர் உள்ளிட்ட முக்கிய அணைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளன. இதில் மேட்டூர், சாத்தனூர், கெலவரப்பள்ளி உள்ளிட்ட அணைகளை ஆய்வுசெய்து மத்திய அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அணைகள் நல்ல நிலையில்தான் உள்ளன.

தேவையான இடங்களில் அரசு அணைகளைக் கட்டிவருகிறது. பொதுப்பணித் துறையிடம் உள்ள உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு அணை சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அணைகளில் ஓய்வுபெற்ற ராணுவத்தினரைக் கொண்டு பாதுகாப்புப் போடப்பட்டுவருகிறது.

அணை
அணை

திருச்சி முக்கொம்பு அணை உடைந்தபோது இந்தத் திட்டத்தின் கீழ் சீரமைக்க கோரிக்கைவைக்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு நிர்வாகக் காரணங்களுக்கு அந்த முயற்சி கைவிடப்பட்டு அரசின் நிதியிலேயே முக்கொம்பு அணை சீரமைக்கப்பட்டுவருகிறது என்று பொதுப்பணித் துறை மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

கோடைக்காலம் விரைவில் தொடங்கவுள்ளதால் அணைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நீர் சேமிப்பை அதிகப்படுத்தும் நோக்கில் உலக வங்கி உதவியுடன் பொதுப்பணித் துறை அணை சீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.