தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்பாகச் சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள விவரக்குறிப்பில் கூறியதாவது: தமிழ்நாட்டில் இன்று மட்டும் 3 ஆயிரத்து 882 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 94 ஆயிரத்து 049ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சென்னையில் 2 ஆயிரத்து 182 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று 63 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 1,264ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 52 ஆயிரத்து 926 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2 ஆயிரத்து 852 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
- அரியலூர் - 463
- செங்கல்பட்டு - 5648
- சென்னை - 60,533
- கோவை - 561
- கடலூர் - 1081
- தர்மபுரி- 86
- திண்டுக்கல் - 507
- ஈரோடு - 176
- கள்ளக்குறிச்சி - 878
- காஞ்சிபுரம் - 2067
- கன்னியாகுமரி - 401
- கரூர் - 145
- கிருஷ்ணகிரி - 146
- மதுரை - 2858
- நாகபட்டினம் -263
- நாமக்கல் - 99
- நீலகிரி - 107
- பெரம்பலூர் - 158
- புதுக்கோட்டை - 204
- ராமநாதபுரம் - 953
- ராணிப்பேட்டை - 762
- சேலம் - 946
- சிவகங்கை - 268
- தென்காசி - 368
- தஞ்சாவூர் - 455
- தேனி - 736
- திருப்பத்தூர் - 186
- திருவள்ளூர் - 3978
- திருவண்ணாமலை - 1859
- திருவாரூர் - 468
- தூத்துக்குடி - 958
- திருநெல்வேலி - 830
- திருப்பூர் - 188
- திருச்சி - 701
- வேலூர்- 1384
- விழுப்புரம் - 944
- விருதுநகர் - 538
கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை: - சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 398
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 339
- ரயில் மூலம் வந்தவர்கள்: 410
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: அண்ணா நகர் மண்டலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்