தமிழ்நாட்டில் மேலும் 3,645 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் இன்று (ஜூன் 26) 1,688 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று கரோனாவுக்கு 46 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 957ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 41,357ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,622ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,957 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,690ஆக உயர்ந்துள்ளது.