ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 3,756 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - தமிழ்நாட்டில் கரோனா எண்ணிக்கை

கரோனா
கரோனா
author img

By

Published : Jul 8, 2020, 6:00 PM IST

Updated : Jul 8, 2020, 7:22 PM IST

17:43 July 08

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 08) 3 ஆயிரத்து 756 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 350ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 08) மேலும் 3 ஆயிரத்து 756 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 350ஆக  அதிகரித்துள்ளது. இன்று கரோனாவுக்கு 64 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை ஆயிரத்து 700ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 51 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் தமிழ்நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 167ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 3ஆவது நாளாக 4 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

மதுரையில் இன்று மட்டும் 379 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 2 ஆயிரத்து 495 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரத்து 261 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 500ஆக உயர்ந்துள்ளது. 

Last Updated : Jul 8, 2020, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.