இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 44 அரசு மற்றும் 30 தனியார் ஆய்வகங்களில் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் இதுவரை ஐந்து லட்சத்து 17 ஆயிரத்து 137 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், இன்று மட்டும் 16 ஆயிரத்து 447 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில், ஆயிரத்து 384 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் இதுவரை கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஐந்தாவது முறையாக கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 585 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 901 ஆக உயர்ந்துள்ளது. இன்று கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 220 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையை பொருத்தவரையில், இன்று இரண்டாவது நாளாக கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில், இதுவரை, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 693ஆக உயர்ந்துள்ளது. மேலும், 12 வயதிற்குள்பட்ட ஆயிரத்து 506 குழந்தைகளும், 60 வயதுக்குள்பட்ட 23 ஆயிரத்து 38 பேரும், 60 வயதிற்கு மேற்பட்ட இரண்டு ஆயிரத்து 712 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 9 ஆயிரத்து 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 167 பேர் இறந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு
வரிசை எண் | மாவட்டங்கள் | கரோனா பாதிப்பு |
1 | சென்னை | 18,693 |
2 | செங்கல்பட்டு | 1,573 |
3 | திருவள்ளூர் | 1,124 |
4 | கடலூர் | 472 |
5 | திருவண்ணாமலை | 470 |
6 | காஞ்சிபுரம் | 465 |
7 | அரியலூர் | 372 |
8 | திருநெல்வேலி | 381 |
9 | விழுப்புரம் | 356 |
10 | மதுரை | 283 |
11 | கள்ளக்குறிச்சி | 252 |
12 | தூத்துக்குடி | 301 |
13 | சேலம் | 209 |
14 | கோயம்புத்தூர் | 153 |
15 | பெரம்பலூர் | 142 |
16 | திண்டுக்கல் | 148 |
17 | விருதுநகர் | 136 |
18 | திருப்பூர் | 114 |
19 | தேனி | 119 |
20 | ராணிப்பேட்டை | 108 |
21 | தஞ்சாவூர் | 103 |
22 | திருச்சி | 100 |
23 | தென்காசி | 96 |
24 | ராமநாதபுரம் | 93 |
25 | நாமக்கல் | 85 |
26 | கரூர் | 82 |
27 | ஈரோடு | 72 |
28 | கன்னியாகுமரி | 76 |
29 | நாகப்பட்டினம் | 72 |
30 | திருவாரூர் | 51 |
31 | வேலூர் | 52 |
32 | சிவகங்கை | 34 |
33 | திருப்பத்தூர் | 36 |
34 | கிருஷ்ணகிரி | 29 |
35 | புதுக்கோட்டை | 29 |
36 | நீலகிரி | 14 |
37 | தருமபுரி | 11 |
போக்குவரத்து | பாதிப்பு |
சர்வதேச விமானம் | 109 |
உள்நாட்டு விமானம் | 32 |
ரயில் மூலம் வந்தவர்கள் | 245 |
வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் மற்றும் ரயில் மூலம் வந்த ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 832 நபர்களில், ஆயிரத்து 740 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விமானங்களில் வந்த மூன்று ஆயிரத்து 53 நபர்களில், 339 பேருக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் தமிழ்நாடு திரும்பிய 11 ஆயிரத்து 32 பேரில் பத்தாயிரத்து 412 பேரின் சளி பரிசோதனை செய்ய மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
794 பேரின் மாதிரிகள் ஆய்வகங்களில் சோதனையில் உள்ளன. 9 ஆயிரத்து 373 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 245 பேர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.