சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 5 ஆயிரத்து 795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்து 449ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் 65 ஆயிரத்து 592 நபர்களுக்கு புதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்து 5 ஆயிரத்து 785, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 10 பேர் என 5 ஆயிரத்து 795 நபர்களுக்கு புதிதாக வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை 37 லட்சத்து 78 ஆயிரத்து 249 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 449 நபர்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் என 53 ஆயிரத்து 155 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 6 ஆயிரத்து 384 பேர் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 171ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 123ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு
சென்னை - 1,20,267
செங்கல்பட்டு - 21,824
திருவள்ளூர் - 21,005
காஞ்சிபுரம் - 14,548
மதுரை - 13,067
விருதுநகர் - 11,639
தூத்துக்குடி - 10,210
தேனி - 10,772
கோயம்புத்தூர் - 10,158
திருவண்ணாமலை - 9,017
வேலூர் - 8,822
ராணிப்பேட்டை - 8,772
திருநெல்வேலி - 7,883
கன்னியாகுமரி - 7,968
கடலூர் - 7,571
சேலம் - 6,766
திருச்சிராப்பள்ளி - 6,212
விழுப்புரம் - 5,573
கள்ளக்குறிச்சி - 5,096
தஞ்சாவூர் - 5,245
திண்டுக்கல் - 5,166
புதுக்கோட்டை - 4,555
ராமநாதபுரம் - 4,149
தென்காசி - 4,214
சிவகங்கை - 3,545
திருவாரூர் - 2,551
திருப்பத்தூர் - 2,210
அரியலூர் - 1,992
கிருஷ்ணகிரி - 1,707
நாகப்பட்டினம் - 1,718
திருப்பூர் - 1,707
ஈரோடு - 1,726
நாமக்கல் - 1,361
நீலகிரி - 1,120
கரூர் - 1,133
தருமபுரி - 1,064
பெரம்பலூர் - 1,048
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 885
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 755
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: சென்னை வரும் பயணிகளை தனிமைப்படுத்த கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு!