தமிழ்நாட்டில் இன்று(ஏப்.21) ஒரே நாளில் 11 ஆயிரத்து 681 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 25 ஆயிரத்து 59 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 258 ஆக உள்ளது. இன்று தொற்றிலிருந்து 7 ஆயிரத்து 71 பேர்
குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றிலிருந்து 9 லட்சத்து 27 ஆயிரத்து 440 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை தமிழ்நாட்டில் 84 ஆயிரத்து 361 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: படுக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை அழைத்தால் பிரதமர் இல்லை- கமல்