ETV Bharat / state

தாயை நினைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் மல்கப் பேச்சு! - edapadi speech with tears

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது, தனது தாயைப் பற்றி, ஆ.ராசா இழிவாக பேசியதை எண்ணி கண்கலங்கினார்.

எடப்பாடி பழனிசாமி
சென்னை திருவொற்றியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் மல்க பேச்சு:
author img

By

Published : Mar 28, 2021, 10:35 PM IST

சென்னை மாவட்டம், திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அக்கூட்டத்தில் பேசிய அவர், 'திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதியிலே போட்டியிடுகின்ற அதிமுக வேட்பாளர் குப்பன், ஏற்கெனவே இத்தொகுதியில் போட்டியிட்டு வென்று, சிறப்பான முறையில் பணியாற்றியவர். நன்கு அறிமுகமானவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவர். அவருக்கு மீண்டும் இந்தத் தொகுதியில் சேவை செய்ய வாய்ப்பினை கொடுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள். உங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்து நிறைவேற்றும் ஒரு திறமையான வேட்பாளர் இங்கு போட்டியிடுகிறார். ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து பொய் பேசி, நாடகம் ஆடி, தந்திரமாக மக்களை குழப்பி வருகிறார். ஆனால், மக்கள் தெளிவுடன், அதிமுக அரசு அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கனவை நனவாக்க இரவு, பகல் பாராமல் மக்களுக்காக உழைக்கின்றோம். ஆனால், திட்டமிட்டு சதிகாரர்கள் வேண்டுமென்றே, அவதூறு செய்தியினை பரப்பி வருகின்றனர். அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அதிமுக அரசு சென்னை மாநகர மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னை மாநகர மக்களுக்கு தங்குதடையில்லாமல் குடிநீர் வழங்கி வருகிறது. சுமார் 1000 எம்.எல்.டி தண்ணீர் நாள்தோறும் சென்னை மாநகர மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை திருவொற்றியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் மல்கப் பேச்சு!

கரோனா தொற்றுக் காலத்திலும், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட்டதில், இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு. கரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் மக்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை கொடுத்த ஒரே அரசு அதிமுக தான். குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கினோம். கரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்டெடுப்பதற்காக உதவிய அரசு அதிமுக தான். அதேபோல, இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், அம்மா உணவகங்களில் மூன்று வேளையும், சுமார் 8 லட்சம் பேருக்கு தமிழ்நாடு முழுவதும் விலையில்லாமல் உணவளித்தோம்.
இந்தியாவிலேயே மிக அதிக அளவில் ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்ட் செய்யப்பட்டு கரோனா தொற்று நோய் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் உரையாற்றும்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்றுநோய் மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதனையே அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பாராட்டினார்கள். தற்போது மீண்டும் பரவி வருகிறது, மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அரசின் வழிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான், இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். அதேபோல், விலையில்லாமல் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நான் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளேன்.

நீங்களும் போட்டுக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனுபவரீதியாக நான் பார்த்தேன். எங்களுடைய அமைச்சர் ஒருவருக்கு நோய் வந்துவிட்டது. அவர் எல்லாப்பக்கமும் போனார். சென்னையில் கூட பல பகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமித்தேன். அப்பொழுது கூட பத்திரமாக இருந்தார். தொகுதிக்குப் போய் மக்களோடு மக்களாக இருந்தபோது எப்படியோ அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு விட்டது. கடுமையான சிகிச்சை அளித்தோம். நானும், துணை முதலமைச்சரும் மருத்துவர்களைச் சந்திக்கின்றபோது, ஆண்டவன் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். அதேபோல ஆண்டவன் காப்பாற்றி விட்டார்.

நான் முதலமைச்சராக இருந்து பேசவில்லை. உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து சொல்லுகின்றேன். இந்த தமிழ் மண்ணில் பிறந்த எவரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. எனவே, அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சிந்தித்துப் பாருங்கள், நான் முதலமைச்சராக இருக்கின்றேன். நான் இதைப் பற்றி பேசக் கூடாது என்று தான் வந்தேன். இந்த தாய்மார்களைப் பார்த்ததால் பேசுகின்றேன். என் தாய் என்று பார்க்காதீர்கள். உங்கள் குடும்பத்தில் ஒரு தாயாகப் பாருங்கள்.

எவ்வளவு கீழ்த்தரமாக பார்க்கின்றார். ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சராக இருந்தால் என்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். ஒரு முதலமைச்சருக்கே இப்படிப்பட்ட நிலைமை என்றால், உங்களைப்போன்ற மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள். இவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், இந்தப் பெண்கள் மற்றும் தாய்மார்களின் நிலைமை என்ன ஆகும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

தயவு செய்து, அருள்கூர்ந்து எனக்காக நான் பேசவில்லை. அவர்களுக்கெல்லாம் தக்க தண்டனையை நீங்கள் வழங்க வேண்டும். என்னுடைய தாய் கிராமத்திலேயே பிறந்து, வளர்ந்தவர். விவசாயி, இரவு, பகல் பாராமல் பாடுபட்டவர். அவர் இறந்து விட்டார். அவரைப் பற்றி இழிவாக தரக்குறைவாக எப்படி எல்லாம் பேசி இருக்கிறார்.

ஒரு முதலமைச்சருக்கே இந்த நிலைமை. நான் நினைத்தால் சாதிக்க முடியும். ஆனால், நான் அப்படி அல்ல. ஒரு சாதாரண குடும்பத்தில் உங்களைப் போல பிறந்து வளர்ந்தவன். ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் தாய் தான் உயர்ந்த ஸ்தானம்.

யார் பெண்குலத்தையும், தாயையும் இழிவாகப் பேசினாலும், அவர்களுக்கு ஆண்டவன் நிச்சயமாக அவர்களுக்குரிய தண்டனையை வழங்குவார். இதைக்கூட பேசக்கூடாது என்று நினைத்தேன். இந்த தாய்மார்கள் இருந்தார்கள். அதனால் தான் பேசினேன். இப்படிப்பட்டவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்துவிட்டால், இவர்கள் எல்லாம் எப்படி அராஜகம் செய்வார்கள். எப்படி பெண்களை இழிவு படுத்துவார்கள் என்பதை மட்டும் தயவு செய்து, அருள்கூர்ந்து இங்குவந்துள்ள தாய்மார்களும், சகோதரிகளும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

ராயபுரம், வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர், விஎம்கே வரை மெட்ரோ ரயில் திட்டம் ரூ.3726 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நம்முடைய அதிமுக சார்பில் திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதியிலே போட்டியிடுகின்ற நமது வெற்றி வேட்பாளர் கே.குப்பனுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள்” எனக்கூறி விடைபெற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க: ஆ. ராசா பரப்புரைக்கு தடை கோரி புகார் மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.