தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமாகிவரும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை பிற்பகல் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
முன்னதாக கரோனா தடுப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் கலந்தாலோசிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கம் குறித்த முக்கிய விவரங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!