ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நடந்த அமைச்சரவை கூட்டம்!

சென்னை: தமிழ்நாட்டில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அமைச்சரவை கூட்டம்
அமைச்சரவை கூட்டம்
author img

By

Published : May 2, 2020, 2:59 PM IST

கரோனா தொற்று தடுப்பு குறித்தும், தமிழ்நாட்டில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முடிவெடுப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

மே 3ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுக்க முதலமைச்சரால் 17 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு வல்லுநர்கள், மற்ற அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தங்களது இடைக்கால அறிக்கையை நேற்று சமர்பித்தது.

இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்தும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அமைச்சரவையில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம்

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக வழங்க வேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கு தளர்வு குறித்து தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஈரோடு ஆட்சியர் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.