சென்னை : தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 81 நபர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1580 நபர்களுக்கு கரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 34 லட்சத்து 75 ஆயிரத்து 212 நபர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 26 லட்சத்து 35 ஆயிரத்து 419 நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பது கண்டிறியப்பட்டுள்ளது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மட்டும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 522 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1509 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 83 ஆயிரத்து 707 ஆக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் 7 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 15 நோயாளிகளும் என 22 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 190 என உயர்ந்துள்ளது.
கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 204 நோயாளிகளும், சென்னையில் 185 நோயாளிகளும் செங்கல்பட்டில் 105 நோயாளிகளும், ஈரோட்டில் 137 நோயாளிகளும், தஞ்சாவூரில் 109 நோயாளிகளும் என கரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,46,434
கோயம்புத்தூர் - 2,38,976
செங்கல்பட்டு - 1,66,818
திருவள்ளூர் - 1,16,661
சேலம் - 96,895
திருப்பூர் - 91,462
ஈரோடு - 99,954
மதுரை - 74,201
காஞ்சிபுரம் - 73,283
திருச்சிராப்பள்ளி - 75,058
தஞ்சாவூர் - 71,999
கன்னியாகுமரி - 61,310
கடலூர் - 62,792
தூத்துக்குடி - 55,626
திருநெல்வேலி - 48,580
திருவண்ணாமலை - 53,782
வேலூர் - 49,072
விருதுநகர் - 45,848
தேனி - 43,286
விழுப்புரம் - 45,104
நாமக்கல் - 49,636
ராணிப்பேட்டை - 42,769
கிருஷ்ணகிரி - 42,342
திருவாரூர் - 39,520
திண்டுக்கல் - 32,614
புதுக்கோட்டை - 29,378
திருப்பத்தூர் - 28,716
தென்காசி - 27,191
நீலகிரி - 32,150
கள்ளக்குறிச்சி - 30,481
தருமபுரி - 27,112
கரூர் - 23,304
மயிலாடுதுறை - 22,357
ராமநாதபுரம் - 20,248
நாகப்பட்டினம் - 20,005
சிவகங்கை - 19,591
அரியலூர் - 16,523
பெரம்பலூர் - 11,806
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1,025
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,082
ரயில் மூலம் வந்தவர்கள் 428
இதையும் படிங்க : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்த திட்டம்!