சென்னை: ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 46ஆவது புத்தக கண்காட்சிக்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்து புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “46ஆவது புத்தகக் கண்காட்சியில் பல்வேறு இடங்களில் இருந்து புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளனர். நான் மிக நீண்ட நேரமாக புத்தகம் படிக்கும் பழங்கம் உள்ளவர். இரவில் புத்தகம் படிக்காமல் எனது விடியல் விடியாது. இத்தனை நாள் புத்தகங்களை படிப்பதால் தான் நான் அனைத்து சவால்களையும் மேற்கொண்டு வருகிறேன்.
ஆகவே, இளைஞர்கள் படிக்க வேண்டும், புத்தகங்கள் படிப்பது மிகப்பெரிய பலத்தை தரும், ஒரு தேனி தேனை சேர்ப்பதற்கு போல அனைத்து புத்தகங்களின் இங்கு சேர்த்து இருக்கின்றனர். எனவே இளைஞர்கள் புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். வீடு வாங்கும் போது நூலகத்திற்கு ஒரு அறையை அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு என்ற பெயர் காமராஜர் மசோதாவை கொண்டு வந்தார். தமிழை ஆட்சி மொழியாக இல்லாமல் பயிற்சி மொழியாக தமிழை கொண்டு வந்தார். இதை அண்ணா சட்டமாக்கியுள்ளார். அதற்காக தமிழ்நாடு என்பதை அதிகாரப்பூர்வமாக பலர் பேசியுள்ளனர்.
தமிழ்நாடு என பெயர் வைக்கும் போது அனைத்து தரப்பினரினையும் இணைத்து வைத்தனர். மிகப்பெரிய சரித்திரத்தை தாண்டி வந்தது இந்த தமிழ்நாடு. தமிழ்நாடு என்ற பெயர் விவகாரத்தில் ஆளுநர் எதற்காக அப்படி பேசினார் என்பது எனக்கு தெரியாது. தமிழ்நாடு விவகாரத்திலும், அவர் வெளிநடப்பு செய்த விவகாரத்திலும் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
தமிழ்நாட்டின் ஆளுநர் குறித்தும், அவரின் செயல்பாடுகள், அவருக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்தும் கருத்து சொல்லும் தகுதி தனக்கு இல்லை” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இன்னும் 10 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி தலைகீழாக மாற்றப்படும்: அண்ணாமலை