ETV Bharat / state

'இந்து தீவிரவாதம்' என்று சொல்வதா..! - கமலுக்கு தமிழிசை கண்டனம்! - kamal

சென்னை: இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் 'இந்து தீவிரவாதம்' என்ற வார்த்தையை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கூறியதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழிசை
author img

By

Published : May 13, 2019, 6:22 PM IST

இது தொடர்பாக தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

மகாத்மா காந்தியின் படுகொலை நாடே பதறிய ஒன்று. அதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அதனால், அந்தச் செயலை செய்த கோட்சே தூக்கிலிடப்பட்டான். ஆனால் இன்று இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் 'இந்துத் தீவிரவாதம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று கமலஹாசன் பேசியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

புதிய அரசியலை முன்னெடுக்கிறோம் என்று சொல்லும் கமலஹாசன் பழைய, விஷமத்தனமான, விஷம் பொருந்திய பிரித்தாளும் ஓட்டு அரசியலில், தானும் கீழ்த்தரமாகத்தான் நடந்து கொள்வேன் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவர் மகாத்மா காந்தி. வாழ்வில் எந்த ஒழுக்கத்தையும் கடைபிடிக்காத கமல், தான் காந்தியின் கொள்ளுப்பேரன் என்று சொல்ல எந்த தகுதியும் இல்லாதவர். இப்படி எந்த தகுதியும் இல்லாமல் அரசியலில் நுழைந்து ஏதாவது ஒரு வகையில் மக்களை கவர வேண்டும் என்று பேசுவது கண்டிக்கத்தக்கது. அதுவும் மதக் கலவரத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் அளவிற்கு பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பக்கத்து நாட்டில் அதிபயங்கரமான குண்டுவெடிப்பு நடந்தபோது, அதில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தும் கண்டிக்காதவர்கள், கருத்து கூட சொல்லாதவர்கள், இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லும் துணிச்சல் அற்றவர்கள், இத்தகைய கொடூர செயல்களை உலகமெங்கும் ஒரு மதத்தினரால் அரங்கேறியபோது தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்று சப்பைக் கட்டு கட்டியவர்கள், இன்று செத்து மடிந்த ஒரு பிரச்னையை அதுவும் இந்து என்ற அடைமொழியோடு சொல்லி இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

பரப்புரை கூட்டங்களில் பதற்றமான கருத்துக்கள் கூறப்படுகிறதா என்பதை கண்டறிய தேர்தல் ஆணையம் வீடியோ பதிவு எடுக்கிறார்கள். இது எதற்கு ..? இத்தகைய கருத்துக்களை கூறினால் நடவடிக்கை எடுப்பதற்குதான் இத்தகைய கருத்துக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வட இந்தியாவில் சிலரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அவர்கள் பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டிருக்கிறது.

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சென்று இந்து தீவிரவாதம் என்று பேசும் கமலின் கருத்து விஷமத்தனமான உள்நோக்கம் கொண்டது. இத்தகைய நோக்கம் உடையவர்களின் பரப்புரையை தடைசெய்ய வேண்டும். பதற்றத்தை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்த முயற்சிப்பதாக, கமல் மீது காவல்துறை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு படத்திற்கு தடை ஏற்பட்டால் நாட்டை விட்டே ஓடி விடுவேன் என்று தன் விஸ்வரூபத்தை காட்டிய கமல், இன்று நாட்டைப் பற்றியும் காந்தியைப் பற்றியும் நாட்டுப்பற்றை பற்றி பேசுவது அப்பட்டமான அரசியல் நடிப்பு. திரை நடிப்பு முடிந்து வாய்ப்பு கிடைக்காத கமல், அரசியல் வாய்ப்புக்காக கண்டபடி பேசுவது கண்டிக்கத்தக்கது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமலுக்கு தமிழிசை கண்டனம் 

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் "இந்து தீவிரவாதம்" என்ற வார்த்தையை பயன்படுத்திய கமலுக்கு எனது வன்மையான கண்டனங்கள் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துளதாவது :

மகாத்மா காந்தியின் படுகொலை நாடே பதறிய ஒன்று ,அதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது . அதனால் ,அந்த செயலை செய்த கோட்சே தூக்கிலிடப்பட்டான். ஆனால்  இன்று இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் "இந்து தீவிரவாதம்" என்ற வார்த்தையை பயன்படுத்தியது  மட்டுமல்லாமல் ,சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று கமலஹாசன் பேசியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது .

புதிய அரசியலை முன்னெடுக்கிறோம்  என்று சொல்லும் கமலஹாசன் பழைய ,விஷமத்தனமான ,விஷம் பொருந்திய பிரித்தாளும் ஓட்டு அரசியலில் தானும் கீழ்த்தரமாக தான் நடந்து கொள்வேன் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார் .

வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவர் மகாத்மா காந்தி. வாழ்வில் எந்த ஒழுக்கத்தையும் கடைபிடிக்காத கமல் ,தான் காந்தியின் கொள்ளுப்பேரன் என்று சொல்ல எந்த தகுதியும் இல்லாதவர் . இப்படி எந்த தகுதியும் இல்லாமல் அரசியலில் நுழைந்து ஏதாவது ஒரு வகையில் மக்களை கவர வேண்டும் என்று பேசுவது கண்டிக்கத்தக்கது.
அதுவும் மதக் கலவரத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் அளவிற்கு பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 பக்கத்து நாட்டில் அதிபயங்கரமான குண்டுவெடிப்பு நடந்து அதில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தும் கண்டிக்காதவர்கள் ,கருத்து கூட சொல்லாதவர்கள் ,இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லும் துணிச்சல் அற்றவர்கள், இத்தகைய கொடூர செயல்களை உலகமெங்கும் ஒரு மதத்தினரால் அரங்கேறிய போது தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்று சப்பைக் கட்டு கட்டியவர்கள், இன்று செத்து மடிந்த ஒரு பிரச்சினையை அதுவும் இந்து என்ற அடைமொழியோடு சொல்லி இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.

 பிரச்சாரக் கூட்டங்களில் பதற்றமான கருத்துக்கள் கூறப்படுகிறதா என்பதை கண்டறிய தேர்தல் ஆணையம் வீடியோ பதிவு எடுக்கிறார்கள். இது எதற்கு ..? 

இத்தகைய கருத்துக்களை கூறினால் நடவடிக்கை எடுப்பதற்கு தான் இத்தகைய கருத்துக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வட இந்தியாவில் சிலரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால்  அவர்கள் பிரச்சாரம் செய்வதை தடை செய்யப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சென்று இந்து தீவிரவாதம் என்று பேசும் கமலின் கருத்து விஷமத்தனமான உள்நோக்கம் கொண்டது.

 ஆக இத்தகைய நோக்கம் உடையவர்கள்  பிரச்சாரம் தடைசெய்யப்பட வேண்டும்.பதற்றத்தை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்த முயற்சிப்பதாக காவல்துறை இவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு படத்திற்கு தடை ஏற்பட்டதால் நாட்டை விட்டே ஓடி விடுவேன் என்று தன் விஸ்வரூபத்தை காட்டிய கமல் இன்று நாட்டைப் பற்றியும் காந்தியைப் பற்றியும் நாட்டுப்பற்றை பற்றி பேசுவது அப்பட்டமான அரசியல் நடிப்பு.
திரை  நடிப்பு முடிந்து வாய்ப்பு கிடைக்காத கமல் அரசியல் வாய்ப்புக்காக கண்டபடி பேசுவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.