மத்திய அரசின் தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கிவருகிறது. அந்தவகையில், இந்த வருடத்திற்கான சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி, சிறந்த அறிவியல் தொழில்நுட்ப படத்திற்கான தேசிய விருது 'ஜி.டி.நாயுடு - தி எடிசன் ஆஃப் இந்தியா' என்ற படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலலூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.