ஈழ விடுதலைப்போரில் உயிர் ஈந்த போராளிகளை நினைவுகூறும் வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1989ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ஆம் தேதி தமிழர்கள் பரவி வாழக்கூடியப் பகுதிகளில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
1983ஆம் ஆண்டு சிங்கள காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்ட ஈழ விடுதலைப் போராளிகளான குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோர்களின் நினைவாக ஆவடி பேருந்து நிலையம் அருகில் நினைவு தூண் ஒன்று அமைக்கப்பட்டது.
அங்குள்ள மாவீரர் தூணில் தமிழர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்துவார்கள். அதுபோல்,நேற்று (நவம்பர்27) தமிழர் விடுதலைக்கழக ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் மாவீரர் நாள் கொண்டாடப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி, செங்காந்தள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: படித்தது ஆங்கில இலக்கியம்! பிடித்தது காளை வளர்ப்பு! - காளைகளின் தங்கச்சி கனிமொழி