ETV Bharat / state

ஆங்கிலம் சரியாக கற்பிக்காததால் தமிழ்வழி பள்ளிகள் மூடப்படுகிறது: அப்பாவு வேதனை

சென்னை: ஆங்கிலம் சரியாக கற்பிக்காததால் தான் தமிழ்வழி பள்ளிகள் மூடப்படுகிறது என திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு
author img

By

Published : Jun 19, 2019, 7:30 PM IST

தமிழ்நாட்டில் உள்ள தமிழ் வழி கல்வி பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கிலத்தை நன்கு பேச பயிற்சியளிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கல்விதுறை முதன்மை செயலரை சந்தித்து மனு அளிக்க திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தலைமை செயலகம் வந்திருந்தார்.

ஆங்கிலம் சரியாக கற்பிக்காததால் மூடப்பட்டு வரும் தமிழ்வழி பள்ளிகள்

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் சரியாக பயிற்றுவிக்கப் படாததால் லட்சக்கணக்கான மாணவர்கள் தமிழ் வழி கல்வியை கைவிடுகின்றனர். ஆசிரியர்கள் ஆங்கிலம் சரியாக பயிற்சியளிக்காததால், அதிகளவிலான மாணவர்கள் ஆங்கில வழி கல்வியைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதற்காக 15 முதல் 30 லட்சம் ரூபாய் வரை சாமானிய மக்கள் செலவு செய்கின்றனர். இதனால் தமிழ் வழி கல்வி பள்ளிகளில் மணவர்கள் சேர்க்கை குறைந்து, மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் நன்கு பேச பயிற்சியளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என பேசினார்.

Intro:Body:ஆங்கிலம் சரியாக போதிக்காததால்தான் தமிழ்வழி பள்ளிகள் மூடப்படுகின்றன என்று திமுக முன்னாள் எம் எல் ஏ அப்பாவு தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள தமிழ் வழி கல்வி பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கிலத்தை நன்கு பேச பயிற்சியளிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி திமுக முன்னாள் எம்எல்ஏ கல்வி துறை முதன்மை செயலரை சந்தித்து மனு அளிக்க தலைமை செயலகம் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் தமிழ்வழி கல்வியில் பயிலும் 85 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் போதிக்கப்படுகிறது. தமிழ் வழியில் பயிலும் இந்த மாணவ மாணவிகள் ஆங்கிலத்தில் சரியாக பேச முடியாமலேயே 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று வெளியே வருகின்றனர். இதுகுறித்த வழக்கில் ஐகோர்ட் ஜனவரி மாதமே தீர்ப்பளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. ஆங்கிலம் சரியாக பயிற்றுவிக்காததால் ஆண்டுக்காண்டு லட்சம் மாணவர்கள் தமிழ் வழி கல்வியை விடுகின்றனர். ஆங்கிலம் சரியாக பயிற்றுவிக்காததால்தான் தமிழ் வழி கல்வி பள்ளிகள் மூடப்படுகிறது. ஆங்கில வழி கல்விக்காக 15 முதல் 30 லட்சம் வரை சாமானிய மக்கள் செலவு செய்கின்றனர். எனவே பள்ளிகளில் மாணவ மாணவிகள் ஆங்கிலத்தில் நன்கு பேச பயிற்சியளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும், என பேசினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.