தென்மேற்கு ரயில்வே சார்பாக கே.எஸ்.ஆர் பெங்களூர் - நாகர்கோவில், யஸ்வந்த்பூர்- கண்ணூர் ஆகிய ரயில்கள் இருமார்க்கங்களிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - மதுரை தேஜாஸ் சிறப்பு ரயிலில் இரண்டு ஏசி பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து லக்னோ, சான்டிராகச்சி, ஜல்பைகுரி உள்ளிட்ட ஊர்களுக்கும், ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் ரயிலிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்த , அவற்றில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.