ETV Bharat / state

அகில இந்திய சீட்டுகளை தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்வு செய்ய வேண்டும்: மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்தி மலர் அறிவுரை!

மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களை தமிழ்நாடு மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் மற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதல் பயன் கிடைக்கும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சாந்தி மலர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 27, 2023, 4:30 PM IST

மருத்துவப் படிப்பு கலந்தாய்வு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக் கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்டது.

2023 - 2024 ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேர்வதற்கு 2 ஆயிரத்து 993 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில், 2 ஆயிரத்து 92 மாணவர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 473 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 133 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

அதேபோல் விளையாட்டுப் பிரிவிற்கு 179 வீரர்களும், முன்னாள் படை வீரர் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 41 மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு சேர்க்கை கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று (ஜூலை 27) காலை தொடங்கியது. கலந்தாய்வு பணிகளை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சாந்தி மலர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் சார்பில் சிறப்பு பிரிவினர் மற்றும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டுக்கான நேரடி கலந்தாய்வு இன்று (ஜூலை 27) நடைபெற்று வருகிறது. விளையாட்டுப் பிரிவில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவுக்கும் கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. 25 ஆயிரத்து 856 பேர் பொது பிரிவுக்கும், 13ஆயிரத்து 176 பேர் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 36 அரசு கல்லூரிகள், கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி, 21 சுய நிதி கல்லூரிகள் நான்கு தனியார் கல்லூரிகள் உள்ளன. அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீடு 15 விழுக்காடு இடங்கள் தவிர இளநிலை எம்பிபிஎஸ் 9 ஆயிரம் இடங்கள் உள்ளன. பல் மருத்துவப்படிப்பில் புதுக்கோட்டையில் இந்தாண்டு புதியதாக 50 இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரி, கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் தலா 100 இடங்கள் என 250 இடங்களிலும் மணாவர்கள் சேர்க்கபடவுள்ளனர். 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரத்து950 இடங்கள் என 2 ஆயிரத்து 200 இடங்கள் உள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 486 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 136 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விளையாட்டு பிரிவில் 7 எம்பிபிஎஸ் இடங்களும், ஒரு பிடிஎஸ் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் எம்பிபிஎஸ் படிப்பில் 10 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 223 இடங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் 93 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 80 பேர் தான் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை குறைவான அளவு இருப்பதற்கு அவர்கள் வேறு துறையில் விருப்பம் இருப்பதால் கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. தகுதி பெற்றிருக்கக் கூடிய 80 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் மருத்துவ இடம் கட்டாயம் கிடைக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள் 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அகில இந்திய கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் 4 ஆம் தேதி சேர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அகில இந்திய இடம் தமிழ்நாடு கல்லூரிகளில் கிடைத்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தான் நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம். அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் நல்ல பயிற்சி தான் கொடுக்கப்படுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு கடைசி நாள் வரும் 29ஆம் தேதி என தெரிவித்துள்ளனர். மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு 31 ஆம் தேதி கடைசி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டு நாள்களில் யோசித்து முடிவு செய்யலாம். இந்த ஆண்டு அரசு மற்றும் நிர்வாக இட ஒதுக்கீடுக்கும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் நடக்கும் பொது பிரிவு கலந்தாய்வில் 9ஆயிரம் பேர் தங்களது கல்லூரிகளை பதிவு செய்துள்ளனர். மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களை தமிழ்நாடு மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதல் பயன் கிடைக்கும். அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது” என தெரிவித்தார்.

இன்று நடைபெற்று வரும் கலந்தாய்விற்கு முதலில் விளையாட்டு பிரிவு மாணவர்களும், அதைத் தொடர்ந்து முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளும், அதன் பிறகு மாற்றுத்திறனாளி மாணவர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு நடந்து வருகிறது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 622 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ஆயிரத்து 450 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் பெற்றோர்களுடன் காலையிலேயே மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். பெற்றோர்கள், மாணவர்கள் அமரவும், அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், கழிவறை வசதி, உணவக வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்யப்பட்டிருந்தன. மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் முதலில் சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் இருந்த இடங்கள் வேகமாக நிரம்பின. அதன் பின்னர் மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசு மருத்துவக் கல்லூரி இடங்களும் நிரம்பின. அரசுப் பள்ளிகளில் படித்து, எவ்வித கட்டணமும் இல்லாமல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பு படிக்க இருப்பதை நினைத்து மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கால்நடை மருத்துவப் படிப்பிற்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.