ETV Bharat / state

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி தேர்வு!

ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசுத் தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டு நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி

author img

By

Published : Jan 3, 2023, 11:57 AM IST

சென்னை: டெல்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்தி மாதிரிகளை கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

மேலும், சுதந்திரப் போராட்டம், 75 ஆண்டு சாதனைகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அணிவகுப்பில் இடம்பெறப் போகும் அலங்கார ஊர்திகளின் பட்டியலை தேர்வுக்குழு வெளியிட்டது. அதில் மகளிர் சாதனையாளர்கள், இந்தியா - 75 கருத்துக்கள் அடங்கிய தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்வு குழு அறிவித்துள்ளது.

அதேபோல, ஆந்திரப் பிரதேசம், அசாம், குஜராத், ஹரியானா, அருணாச்சலபிரதேசம், ஜார்கண்ட், கேரளா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம் மற்றும் யூனியன் பிரதேசங்களான டையூ, ஜம்மு காஷ்மீர், டாடா நகர் ஹவேலி-டாமன், லடாக் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Delhi Republic Day Celebration
Delhi Republic Day Celebration

கடந்தாண்டு குடியரசு தினத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் புகழை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்தி, டெல்லியில் தேர்வு செய்யப்படாததால், தமிழ்நாடு அரசின் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துக்கொள்ள செய்ததோடு, மாநிலம் முழுவதும் அரசு சார்பில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் விதமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு: இன்று முதல் டோக்கன் விநியோகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.