ETV Bharat / state

கடன் தொல்லை: காவல் உதவி ஆய்வாளர் சுட்டு தற்கொலை!

author img

By

Published : Jul 27, 2020, 8:48 PM IST

சென்னை: கடன் தொல்லை காரணமாக சிறப்பு உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

காவல் உதவி ஆய்வாளர் சுட்டு தற்கொலை
காவல் உதவி ஆய்வாளர் சுட்டு தற்கொலை

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேகர் (45). இவர் ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது குடும்பத்தினர் மதுரவாயிலில் வசித்து வருகின்றனர். இன்று (ஜூலை.27) சேகர் விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

அப்போது அவர் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில் வந்த காவல் துறையினர் சேகர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினரின் விசாரணையில் சேகர் சொந்த ஊரில் வீடு கட்டுவதற்காக, சுமார் 25 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி உள்ளார்.

கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவர் பல நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் காவலரின் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: இணைய வழி சூதாட்டம்: உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.