ETV Bharat / state

’பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக’ - தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை

சென்னை: தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டவாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், முதலமைச்சருக்கு  கோரிக்கை விடுத்துள்ளது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்
author img

By

Published : Aug 25, 2021, 8:51 AM IST

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமைச் செயலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என விடியலை நோக்கி காத்திருந்தவர்களுக்கு இடியாய் வந்து விழுந்துள்ளன சமீபத்திய அறிவிப்புகள்.

7ஆவது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை இழந்தோம். ஈட்டிய விடுப்பு சரண்டர் பணப்பலன் இழந்தோம். 1000 ரூபாய் போனஸ் இழந்தோம். இருப்பினும், பழைய ஓய்வூதியத் திட்டம் தான் ஒற்றை இலக்கு எனக் காத்திருந்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் காட்சிகள் மாறவில்லை.

நிதியமைச்சர் அகவிலைப்படி (Dearness Allowance) 01.04.2022இல் வழங்கப்படும் என அறிவித்தார். அவ்வறிவிப்பில் அகவிலைப்படி 01.07.2021 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என அறிவித்திருந்தால், அரசின் நிதிநிலைமை கருதி அமைதி காத்திருந்திருப்போம்.

ஆனால் சமூக நீதியையும், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப் படியையும், (Dearness Allowance) இணைத்து நிதியமைச்சர் அவையில் பேசியது, தலைமைச் செயலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளர், ஆசிரியர்கள் நெஞ்சில் முள்ளாய் தைத்தது.

நிதி நிலைமை சரியில்லை என்பதால் பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை எனக் கூறாமல் நிதிநிலைமை சீரடைந்ததும் பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் என நிதியமைச்சர் அவையில் தெரிவித்திருந்தால் மீண்டும் அரசின் நிதிநிலைமை கருதி அமைதி காத்திருந்திருப்போம்.

ஆனால், அவையில் சொன்னதோடு மட்டும் இல்லாமல், ஊடகத்திலும் நிதியமைச்சர் அறிவித்தது எங்கள் உரிமைகளை சுக்கு நூறாக உடைத்து விட்டது.

“அரசுப் பணியாளர்கள் ‘அரசின் மூளை’. அவர்களை கண்ணியத்தோடு பாதுகாக்க வேண்டும். அரசுப் பணியாளர்களுக்கு வழங்கும் அகவிலைப்படியினை மத்திய அரசுக்கு இணையாக, அறிவிக்கிறேன். அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல, அவர்களது அடிப்படை உரிமை” எனப் பேசிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அன்புடன் நினைவு கூறுகிறோம்.

அவர் இருந்த அவையிலே, சமூகநீதியையும், அகவிலைப்படியையும் நிதியமைச்சர் இணைத்துப் பேசியதை முதலமைச்சர் மறுத்துப் பேசாதது அனைத்து தலைமைச் செயலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களிடம் மிகுந்த வருத்தத்தை உண்டாக்கியுள்ளது.

நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. கருணாநிதியின் அன்பு மகனும், தமிழ்நாடு மக்களின் நம்பிக்கை நாயகனுமான தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறோம்.

எனவே, நிதியமைச்சரின் அறிவிப்புகளை உடனே திரும்பப் பெற்று 01.07.2021 முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படியையும், 10 லட்சம் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த வாக்குறுதியான மீண்டும் பழையத் ஓய்வூதிய திட்டத்தினையும் அறிவிப்பாக வெளியிடும்படி தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.