சென்னை : சென்னை, எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் பொதுப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணையை மருத்துவக்கல்வி மாணவர்கள் சேர்க்கைக்குழு வெளியிட்டுள்ளது.
மருத்துக்கல்வி மாணவர்கள் சேர்க்கைக்குழுவின் செயலாளர் வசந்தாமணி வெளியிட்டுள்ள கால அட்டவணையில் கூறப்பட்டுள்ளதாவது:-
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் பொதுப்பிரிவில் மாணவர்கள் அரசு, தனியார், இஎஸ்ஐசி கல்லூரிகளில் உள்ள இடங்களை தேர்வுச் செய்ய வரும் 30ஆம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 5 மணி வரையில் பதிவு செய்யலாம்.
நீட் மதிப்பெண்கள்
தரவரிசை எண் 1 முதல் 10 ஆயிரத்து 456 வரை இடம் பெற்றுள்ள மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். நீட் தேர்வு மதிப்பெண்கள் 710 முதல் , 410 வரையான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் மாணவர்களின் விபரங்கள் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு மருத்துவக்கல்லூரிகளில் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையில் நடைபெறும்.
கல்லூரி ஒதுக்கீடு
மாணவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீடு 12ஆம் தேதி வெளியிடப்படும். 13ஆம் தேதி தற்காலிக கல்லூரி ஒதுக்கீட்டு உத்தரவுகளை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் மதியம் 3 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.
மாணவர்களுக்கான யூசர்ஐடி மற்றும் பாஸ்வேர்ட், ஒருமுறை பயன்படுத்தும் எண் ஆகியவற்றை மற்றவர்களுக்கு அளிக்கக்கூடாது. மாணவர்கள் தங்கள் விரும்பு கல்லூரிகளை கவனமான பதிவு செய்ய வேண்டும். இட ஒதுக்கீட்டு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும்.
ரூ.500 கலந்தாய்வு கட்டணம்
கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் சேருவதற்கு முன்னர் உண்மையான சான்றிதழ்களை அளிக்கவேண்டும். மருத்துவப் படிப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போதே 500 ரூபாய் வசூலித்த நிலையில், ஆன்லைன் வழியிலான கலந்தாய்வுக்கு 500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 500 ரூபாய் திருப்பித் தரப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் வெளியீடு