ETV Bharat / state

மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகை! - tamil news update

மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள், பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகை!..

author img

By

Published : Apr 11, 2023, 10:39 PM IST

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் 50 சதவீதம் நேரடியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம் மூலமாகவும், 50 சதவீதம் பதவி உயர்வின் மூலமாகவும் நிரப்பப்படுகிறது. எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு 2022 டிசம்பர் 14-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்களை பெற்றது. எனவே அப்பணிக்கு சுமார் 14 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இவர்களுக்கான முதல் நிலைத் தேர்வு வரும் 20-ஆம் தேதி கம்ப்யூட்டர் முறையில், காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையில் நடத்தப்பட உள்ளது. இந்தநிலையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் 3-ஆம் தேதியிலும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 5-ஆம் தேதியிலும் முடிவடைந்துள்ளது.

அவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பம் செய்து இருந்ததால், தேர்வினை எழுத முடியாது. எனவே, தங்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து தேர்வு எழுதுவதற்காக விலக்கு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டள்ள அறிவிப்பில், "மாவட்டக்கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு கம்ப்யூட்டர் மூலம் 20-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் 10-ஆம் வகுப்பு தேர்வுப் பணி மற்றும் 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் தங்களுக்கு உரிய முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலரிடம் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தற்கான உரிய ஆவணங்களை காண்பித்து, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம்" என கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் 22 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.